காணாமல் போன 1193 செல்போன்களை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்த சென்னை காவல்துறை..!

காணாமல் போன 1193 செல்போன்களை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்த சென்னை காவல்துறை..!
காணாமல் போன 1193 செல்போன்களை  கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்த சென்னை காவல்துறை..!

சென்னையில் காணாமல்போன மற்றும் திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஒப்படைத்தார்.


சென்னையில், காணாமல் போன மற்றும் திருடப்பட்ட 1193 செல்போன்களை 12 காவல் மாவட்ட சைபர் பிரிவு போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று ஒப்படைத்தார்.

அப்போது சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேசுகையில், சென்னை போலீசார் பொதுமக்களுக்கு சேவைசெய்து வருகிறோம். கொரோனா காலத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வந்து புகார் கொடுக்க கஷ்டமாக இருக்கும். என்பதால் பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் வீடியோகால் மூலமாக என்னிடமும் 12 காவல் மாவட்டங்களில் உள்ள 12 காவல்துறை துணை ஆணையர்களிடமும் புகார்கள் கொடுத்து வருகின்றனர்.


தற்போது சைபர் குற்றங்கள் அதிகம் நடப்பதால் 12 காவல் மாவட்டங்களிலும் சைபர் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்துதான் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்தந்த காவல்மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவிலேயே புகார் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சைபர் பிரிவில் தற்போது வரை 600-க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் வந்துள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றத்தால் பறிக்கப்பட்ட ரூ. 18 லட்சத்தை உரியவர்களுக்கு திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நம்மில் ஒன்றாக இருக்கும் செல்போனில்; நம்முடைய அனைத்து விவரங்களும் இருக்கும். அது தொலைந்து போனால் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆகையால் செல்போன்கள் தொலைந்து போன மற்றும் பறிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.


அதன்மூலம் சுமார் ரூ 12 கோடி மதிப்புள்ள 1193 செல்போன்களை பறிமுதல் செய்த தனிப்படையை பாராட்டுகிறேன். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இவை சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பிறமாவட்டங்கள் பிற மாநிலங்களில் இருந்தும் கைப்பற்றப்பட்டன.


சைபர் பிரிவில் எந்த புகார் வந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று அடையாறு சைபர் பிரிவில் லோன் தருவதாக கூறி ரூ. 20 ஆயிரம் பணத்தை வங்கி கணக்கில் திருடி விட்டதாக புகார் வந்தது. உடனே சைபர் பிரிவு போலீஸ் தீவிர விசாரணை நடத்தனர். மோசடி கும்பல் நாமக்கலில் இருப்பதாக தகவல் கிடைத்து தனிப்படை போலீசார் கொரோனா காலத்திலும் அங்கு சென்று குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.


அதேபோல போலி கால்சென்டர் நடத்தி வந்த 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 5 சிறார்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை போலீசாரின் பாலிசி குற்றம் பூஜ்ஜியமாக வேண்டும். குற்றம் பெரியதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். பெண் ஒருவர் தனக்கு நடந்த பாலியல் தொல்லை நடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வீட்டில் சென்று புகார் வாங்கி 100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளோம். எந்த வழியாக புகார்கள் வந்தாலும் சென்னை காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com