சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் காமராஜ்
ரேஷன் அட்டைகளை சர்க்கரை அட்டையாக வைத்திருப்போர், அவற்றை அரிசி பெறும் அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
சர்க்கரை அட்டை வைத்திருப்போரின் கோரிக்கைகளை ஏற்று முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி, சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விரும்பினால் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடம் விண்ணப்பிக்கலாம்.
பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைக்கு மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.