வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்புமுகநூல்

ரயில்வேயில் வேலையில் சேர வேண்டுமா?... அற்புதமான வாய்ப்பு!

தமிழகத்திற்கு உட்பட்ட தென்னக ரயில்வேயில் மட்டும் 2,694 காலி பணியிடங்கள் உள்ளது..
Published on

இந்திய ரயில்வேயில் மொத்தம் நாடு முழுக்க 32,428 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்திற்கு உட்பட்ட தென்ன ரயில்வேயில் மட்டும் 2,694 காலி பணியிடங்கள் உள்ளது.

கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், எஸ்.எஸ்.எல்.சி படித்து இருந்தால் போதுமானது.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 18 - 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18000 (அடிப்படை சம்பளம்)

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு
வெளியானது UPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு... காலி பணியிடங்கள் எத்தனை? தேர்வு எப்போது?

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.02.2025

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com