\
அழுத்தங்களில் இருந்து விடுபட யோகா உதவும்... பிரதமர் மோடி

அழுத்தங்களில் இருந்து விடுபட யோகா உதவும்... பிரதமர் மோடி

அழுத்தங்களில் இருந்து விடுபட யோகா உதவும்... பிரதமர் மோடி
Published on: 

அனைத்து அழுத்தங்களில் இருந்தும் விடுபட ஒரே நிவாரணி யோகா என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பின்னர் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற மோடி, அங்கு சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இணைந்து தியானத்திலும் ஈடுபட்டார்.

பின்னர் பேசிய பிரதமர், சிவராத்திரி அன்று சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். காசி முதல் கோவை வரை நம்மை அனைவரையும் சிவன் ஒன்றிணைத்துள்ளார் என்றும், மொழிகள் பல இருந்தாலும், ஆன்மீகம் ஒன்று தான் என்றும் தெரிவித்தார்.

மாறிவரும் நாகரீக உலகில் பல பிரச்னைகளை சந்திக்கிற போதும், யோகா பயிற்சி மூலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும் என்று மோடி குறிப்பிட்டார். அனைத்து அழுத்தங்களில் இருந்தும், நோய்களில் இருந்தும் விடுதலை பெறுவதற்கு யோகா உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com