\
விளைந்து நிற்கும் பொங்கல் கரும்புகள்; அதிகாரிகள் எப்போது வருவர்?

விளைந்து நிற்கும் பொங்கல் கரும்புகள்; அதிகாரிகள் எப்போது வருவர்?

விளைந்து நிற்கும் பொங்கல் கரும்புகள்; அதிகாரிகள் எப்போது வருவர்?
Published on

பொங்கல் பரிசுப்பொருட்களுடன் வழங்கக்கூடிய செங்கரும்பை பெருமளவில் பயிரிட்டுள்ள போதிலும், கொள்முதல் செய்ய இதுவரை யாரும் வரவில்லை என்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குமாரபாளையத்தை சுற்றியுள்ள பல்வேறு சிற்றூர்களில் செங்கரும்பு அதிகளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளது. பொங்கலுக்கு சுமார் 20 நாட்களே உள்ள நிலையில், கரும்பை கொள்முதல் செய்ய அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். வழக்கமாக பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வேளாண்மைத்துறை அதிகாரிகள் வந்து கரும்பின் விலையை நிர்ணயம் செய்துவிடுவது வழக்கம் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com