மருத்துவமனையில் மாணவி உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகை

மருத்துவமனையில் மாணவி உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகை
மருத்துவமனையில் மாணவி உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகை

சென்னை வெட்டுவாங்கேனி பகுதியில், காலில் வெந்நீர் ஊற்றியதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென உயிரிழந்ததால் அவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

தாவூத் என்பவர் மகள் பர்துன் நிஷா (17). தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்த இவர், காலில் வெந்நீர் கொட்டியதால் இரண்டு நாட்களுக்கு முன்கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார். மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கூறி அவரின் உறவினர்கள் மருத்துவமனையை அடித்து உடைத்தனர். மேலும், உரிய விசாரணை கோரி சாலைமறியலிலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து அங்கு சென்ற நீலாங்கரை உதவி ஆணையர், பர்துன் நிஷாவின் மரணம் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com