\
ஜல்லிக்கட்டுக்காக விருதை உதறிய எழுத்‌தாளர்..!

ஜல்லிக்கட்டுக்காக விருதை உதறிய எழுத்‌தாளர்..!

ஜல்லிக்கட்டுக்காக விருதை உதறிய எழுத்‌தாளர்..!
Published on: 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் போராட்டம் உச்சம் அடைந்துள்ள நிலையில் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தனக்கு அளிக்கப்பட்ட விருதை திரும்ப ஒப்படைத்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார், தமக்கு‌ அளிக்கப்பட்ட “யுவபுரஸ்கார்” விருதைத் திரும்ப ஒப்படைத்துள்ளார். சென்னையில் உள்ள சாகித்ய அகாடமி அலுவலகத்தில் அவர் தனக்கு வழங்கப்பட்ட அந்த விருதை ஒப்படைத்தார்.

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதாவும், இதற்கான எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

‘கானகன்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி சார்பில் லஷ்மி சரவணக்குமாருக்கு கடந்த ஆண்டு விருது வழங்கப்பட்டிருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com