\
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்..!

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்..!

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்..!
Published on

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். அவருக்கு வயது 73.

புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவருக்கு வயது 73. 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை கொடுத்துள்ள இவர், ‘வானம் வசப்படும்’ என்ற நாவலுக்காக மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். இதுதவிர தமிழக மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது உள்பட ஏகப்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2 மாத காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவரின் உயிர் பிரிந்தது. பிரபஞ்சனின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com