\
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்
Published on

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (66) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

விருதுநகர் மாவட்டம் மேலாண் மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றாலும் எழுத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டதால் ஏராளமான சிறுகதைகள் நாவல்கள் எழுதியுள்ளார். இலக்கிய நூல்களையும் தேடி தேடி அதிகமாக படித்தார். கல்கி சிறுகதை போட்டியில் இரண்டு முறை இவரது சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு மின்சாரப்பூ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறார் பொன்னுசாமி. ஊர் பெயரையும் சேர்த்து மேலாண்மை
பொன்னுசாமி என்றே அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 66. பொன்னுசாமி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com