எந்தச் சட்டத்திலும் குழந்தைகளுக்காக முதல் வரியை எழுதுங்கள்- லதா ரஜினிகாந்த்

எந்தச் சட்டத்திலும் குழந்தைகளுக்காக முதல் வரியை எழுதுங்கள்- லதா ரஜினிகாந்த்

எந்தச் சட்டத்திலும் குழந்தைகளுக்காக முதல் வரியை எழுதுங்கள்- லதா ரஜினிகாந்த்
Published on

எந்தச் சட்டத்தை கொண்டுவந்தாலும் அதன் முதல் வரியை குழந்தைகளுக்காக எழுதுங்கள் என லதா ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது.

பின்னர்  70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை, அதன்பின் 85 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் இறங்கி 100 அடி ஆழத்திற்குச் சென்றுவிட்டான். குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். இதனிடையே 26 மணி நேரத்தை கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எந்தச் சட்டத்தை கொண்டுவந்தாலும் அதன் முதல் வரியை குழந்தைகளின் பாதுகாப்பிற்காக எழுதுங்கள் என லதா ரஜினிகாந்த்
வலியுறுத்தியுள்ளார். குழந்தைகள் பாதுகாப்பிற்காக தேசிய அளவில் ஒரு அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்காக மாநில அரசுகளும் தனிக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com