நீங்கள் கேள்விப்பட்டதை எழுதி வையுங்கள் - மாணவ மாணவிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
Finance minister
Finance ministerpt desk

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பழமையான அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோயில் உள்ளது. இங்கு வருகை தந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து கோவிலுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவில் வளாகத்தில் இருந்த கல்வெட்டுகளை படித்துப் பார்த்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், நம்முடைய சரித்திரத்தை சொல்லக்கூடிய ஏதாவது ஓன்று அந்த ஊரில் இருக்கிறதென்றால் அதை பார்க்கக்கூடிய ஆர்வம் நம்மிடம் இருக்க வேண்டும். இன்றைக்கு இந்த ஏரியாவைச் சேர்ந்தவர்களான நீங்கள் எல்லோரும், வெளியில் இருந்து வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் கூட இருக்கலாம். ஆனால், இங்கே இன்று கோவிலுக்கு தெய்வத்தை வழிபடுவதற்காக மட்டும் நாம் போவதில்லை. எல்லோரும் கோவிலுக்கு போய் விபூதி பூசி கொண்டு, தீப ஆராதனை செய்து விட்டார்கள் நாம் போய்விடலாம் என்று போய் விடுகிறோம்.

ஆனால், அப்படி போகாமல் ஒரு பத்து நிமிடம் கூடுதலாக எடுத்துக்கொண்டு வெளி பிரகாரத்தில் இருக்கக்கூடிய கல்வெட்டில் என்ன எழுதி இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். அதை நாம் படிக்க முடியாது அதற்கு தனிப்பட்ட பயிற்சி இருந்தால் தான் படிக்க முடியும் ஆனால் அதை படிக்க முடிந்த அளவிற்கு படித்துப் பார்க்கலாம். நாம் எல்லோரும் நன்றாக படித்து, நல்ல பட்டதாரியாக நல்ல வேலையில் இருப்பதோடு நமது நாட்டை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது நாட்டை பற்றி பேச வேண்டும் நமது நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு இடமும் ஆயிரம் கதைகள் சொல்லக்கூடிய இடம் அதிலிருந்து ஏதாவது ஒரு கதையை கூட நீங்கள் உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய பேஸ்புக் வாட்ஸ் அப்பில் போடுங்கள் அப்படித்தான் நம்முடைய நாட்டில் சுற்றுலாத்துறை இன்னும் வளரும், சுற்றுலாத்துறை என்றால் வெளிநாட்டினர் வருவது மட்டும் அல்ல நாமே கூட தான். இன்றைக்கு தான் நான் வந்தேன். நான் உண்மையை ஒத்துக் கொள்கிறேன் இதுவரை இந்த கோவிலுக்கு வந்தது கிடையாது, நான் தேடித்தேடி போகிற போகக்கூடிய ஆர்வம் எனக்கு இருந்தாலும் இங்கு வந்தது கிடையாது.

ரொம்பவே வலியுறுத்துகிறேன் இன்றைக்கு எனக்கு ஓரு சின்ன உதவி செய்யுங்கள் வீட்டிற்குச் சென்று பெற்றோர்களிடம் சொல்லுங்கள் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபடுவது வேறு, வெளியில் இருக்கக்கூடிய விஷயங்களை பார்த்தால் நம்முடைய நாட்டில் எத்தனை விதமான அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பது புரியும் கடைசியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். எல்லாவற்றையும் தினந்தோறும் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வையுங்கள். அல்லது சின்ன டைரி வைத்துக் கொள்ளுங்கள் இன்றைக்கு இது எது பண்ணினேன். இது இன்றைக்கு கேள்விப்பட்டேன் யாரோ இதை சொன்னார்கள் என்று எழுதி வையுங்கள் ஆறு மாதம் கழித்து அதை நீங்களே புரட்டிப் பார்த்தால் ஆச்சிரியமாக இருக்கும்.

நான் இவ்வளவு எழுதி இருக்கிறேனா இவ்வளவு விஷயங்களை தெரிந்து கொண்டேனா என்று அதுதான் அரசர்கள் அன்றைக்கு கல்வெட்டில் பண்ணியிருக்கிறார்கள். நாம் நோட்டு புத்தகத்தில் முதலில் செய்வோம் அதற்கு அப்புறம் நோட்புக்கு கூட இப்போது இல்லை இன்றைக்கு எல்லோரும் டக் டக் டக் என்று ஒரு செய்தி அனுப்புகிறார்களே அதுபோல் மெசேஜோடு இருக்கக்கூடிய நோட்பு இருக்கும் அந்த நோட்டில் போடுங்கள் நீங்களே அப்புறம் ஆச்சரியப்படுவீர்கள் இவ்வளவு விஷயம் எனக்கு தெரிய வந்ததா என்று.

அது ஒரு நல்ல பழக்கம் படுத்துக் கொள்வதற்கு முன்பாக ஒரு ஐந்து நிமிடம் நோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள் ஊர் குறித்து என்ன தெரிந்தது என்று எழுதி வையுங்கள் என்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com