\
தமிழகத்தில் நாளை ஜன.28 முதலே அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி

தமிழகத்தில் நாளை ஜன.28 முதலே அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி

தமிழகத்தில் நாளை ஜன.28 முதலே அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி
Published on: 

தமிழகத்தில் நாளைமுதலே அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் கொரோனா கட்டுப்பாடுகளில் சற்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளைமுதலே அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com