\
இராஜராஜன் மணிமண்டபத்தில் செயல்படும் குளிர்பானக்கடை தண்ணீர் பாட்டிலில் புழுக்கள்

இராஜராஜன் மணிமண்டபத்தில் செயல்படும் குளிர்பானக்கடை தண்ணீர் பாட்டிலில் புழுக்கள்

இராஜராஜன் மணிமண்டபத்தில் செயல்படும் குளிர்பானக்கடை தண்ணீர் பாட்டிலில் புழுக்கள்
Published on

தஞ்சாவூர் இராஜராஜன் மணிமண்டபத்தில் செயல்பட்டு வரும் குளிர்பானக் கடையில் விற்பனை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலில் புழுக்கள் இருந்தது பொதுமக்களை அதிர்ச்சி அடையச்செய்தது.

நேற்றைய தினம் விடுமுறை என்பதால் தஞ்சாவூர் இராஜராஜன் மணிமண்டபத்தில் அதிக அளவிலான மக்கள் குவிந்திருந்தனர். மணிமண்டபத்தில் ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் கடையில், கலை என்பவர் தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக வாங்கிய தண்ணீர் பாட்டிலில் புழுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கடை உரிமையாளரிடம் கேட்டபோது அவர் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com