ஆத்தூர் அருகே உலகிலேயே உயரமான முருகன் சிலை: ஏப்ரல் 6-ல் கும்பாபிஷேகம்

ஆத்தூர் அருகே உலகிலேயே உயரமான முருகன் சிலை: ஏப்ரல் 6-ல் கும்பாபிஷேகம்
ஆத்தூர் அருகே உலகிலேயே உயரமான முருகன் சிலை: ஏப்ரல் 6-ல் கும்பாபிஷேகம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம் பாளையத்தில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் 145 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இச்சிலையானது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 5 அடி உயரம் கொண்டது ஆகும். இந்த சிலை திறக்கப்பட்டால், இதுதான் உலகிலேயே பெரிய முருகன் சிலையாக இருக்கும். இதன் கட்டுமானப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து கோயில் நிர்வாகி ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது தந்தை முத்துநடராஜன் 2016-ம் ஆண்டு முருகன் சிலை அமைப்பதற்கான ஏற்பாட்டை துவங்கினார். இந்த சிலை வடிவமைப்பு பணி, மலேசியா பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தைச் சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 6-ம் தேதி இதன் கும்பாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேகத்தில் தமிழகத்தில் உள்ள மடாதிபதிகள், ஆதினம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com