சீறிப்பாயும் காளைகள்.. திமிலை அடக்கும் காளையர்கள்.. துவங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு!

தமிழரின் வீர விளையாட்டாகவும் அடையாளமாகவும் கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று மதுரை அவனியாபுரத்தில் நடந்து முடிந்த நிலையில், தற்போது மதுரை பாலமேட்டில் இன்று காலை 7 மணி அளவில் துவங்கியது.
பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டுபுதிய தலைமுறை

தமிழரின் வீர விளையாட்டாகவும் அடையாளமாகவும் கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று மதுரை அவனியாபுரத்தில் நடந்து முடிந்த நிலையில், தற்போது மதுரை பாலமேட்டில் இன்று காலை 7 மணி அளவில் துவங்கியது.

மதுரை பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆறு மைதானத் திடலில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி போட்டியை கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

களம் காணும் மாடு பிடி வீரர்கள் 700,

சீறும் காளைகள் 1000 .

மொத்த சுற்றுகள் 10.

ஒரு சுற்றுக்கான உத்தேச நேரம் 60 நிமிடங்கள்.

மேலும் போட்டியின் இறுதியில் சிறந்த மாடிபிடி வீரருக்கு ஒரு காரும், சிறந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ஒரு காரும் வழங்கப்பட இருக்கிறது. இரண்டாம் இடம் பிடிக்கும் காளையின் உரிமையளருக்கு கன்றுடன் நாட்டுமாடு வழங்கப்படும்.

வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர் மாடத்தில் 2 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு களம்காண வந்திருக்கும் காளைகளையும், அதனை காண வந்திருக்கும் பார்வையாளர்களையும், எதற்கும் அசரா மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் வகையில் முதலுதவி வசதிகள், ஆம்புலன்ஸ் சேவை, கால்நடை மருத்துவர்கள் மற்றும் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார்களும் குவிக்கப்பட்டுள்ளன.

பாலமேடு ஜல்லிக்கட்டு
”என் காளைய பிடிச்சா ஒரு லட்சம் பரிசு”.. சிக்காமல் சீறிப்பாய்ந்த காளை; சொல்லியடித்த உரிமையாளர்!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளும் மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னரே களத்திற்குள் அனுப்பப்படுகின்றனர்.

முன்னதாககான பாலமேடு ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு, கடந்த 10 ஆம் தேதி தொடங்கியநிலையில் ஜல்லிக்கட்டு களம் காண 3 ஆயிரத்து 677 காளைகளின் பெயர்கள் முன்பதிவு செய்யப்பட்டன. காளைகளின் திமில் பிடித்திட ஆயிரத்து 412 இளைஞர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இத்தகைய பிரசித்தி பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு கண்டு வருகின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com