மாநிலத்தின் சுகாதாரத்தை மேம்படுத்த ! உலக வங்கியிடம் கடன் வாங்கிய தமிழக அரசு

மாநிலத்தின் சுகாதாரத்தை மேம்படுத்த ! உலக வங்கியிடம் கடன் வாங்கிய தமிழக அரசு

மாநிலத்தின் சுகாதாரத்தை மேம்படுத்த ! உலக வங்கியிடம் கடன் வாங்கிய தமிழக அரசு
Published on

சுகாதாரத் துறையின் சீர்திருத்தத்திற்காக உலக வங்கியிடம் 287 மில்லியம் டாலர் கடன் தமிழக அரசு பெற்றுள்ளது. 

சுகாதார துறையில் தமிழ்நாடு அரசு பல முக்கிய முன்னேற்பாடுகளை எடுத்துவந்தன் விளைவாக தமிழ்நாட்டில் பிரசவகால இறப்பு லட்சத்தில் 90 இறப்பிலிருந்து 62 இறப்பாக ஆக குறைந்துள்ளது. அதேபோல பச்சிளம் குழந்தைகளின் இறப்பு லட்சத்திற்கு 20ஆக குறைந்துள்ளது. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், மகப்பேறு திட்டங்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் எனப் பல உள்ளன. அத்துடன் நிதி ஆயோக் வெளியிடும் சுகாதார குறியீட்டில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.

எனினும் தமிழ்நாட்டில் தொற்றாத நோய்கள் மூலம் இறப்பவர்கள் சதவிகிதம் 69ஆக உள்ளது. இதனால் தமிழ்நாடு சுகாதார துறைக்கு தொற்று நோயைவிட தொற்றாத நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் அதிக முன்னெற்பாடுகள் தேவைப்படுகின்றது. இதற்கு தமிழ்நாடு சுகாதார சீர்திருத்தம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தேசிய தரம் வாய்ந்த சுகாதார மையங்கள் அமைப்பது, மருத்துவ சிகிச்சை முறைகளை தரம்படுத்துவது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ படிப்பு ஆகியவற்றை உலக தரத்திற்கு உயர்த்துவது, மருத்துவ துறையை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்ப்பது ஆகிய சீர்திருத்தங்களை செய்யவுள்ளது. 

இந்நிலையில் இந்தத் திட்டத்திற்கு நிதி தேவைக்காக உலக வங்கியிடம் தமிழ்நாட்டு அரசு கடன் பெற்றுள்ளது. இதற்காக உலக வங்கியிடம் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசிற்கு சுகாதார துறை சீர்திருத்ததிற்காக 287 மில்லியன் டாலர்  கடன் உலக வங்கி வழங்கியுள்ளது. ஏற்கெனவே உலக வங்கியின் கடனில் தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் வசதி திறம்பட செய்து முடிக்கப்பட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com