தமிழ்நாடு
'ஊக்கத்தொகை வழங்குக' - மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
'ஊக்கத்தொகை வழங்குக' - மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
பழனி முருகன் கோயிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள், 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி, கோரிக்கை சின்னம் அணிந்து வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
கோயில்களில் மொட்டை அடிப்பதற்கான கட்டணத்தை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஊக்கத் தொகை வழங்கவில்லை எனக்கூறி, பழனி தண்டாயுதபாணி கோயிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் 330 பேர், கோரிக்கை பேட்ஜ் அணிந்து வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊக்கத் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், மொட்டை அடிக்கும் தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.