\
சென்னை: தூர்வாரியபோது கிணற்றுக்குள் கைதவறி விழுந்த தொழிலாளி.. விஷவாயு தாக்கி பலி!

சென்னை: தூர்வாரியபோது கிணற்றுக்குள் கைதவறி விழுந்த தொழிலாளி.. விஷவாயு தாக்கி பலி!

சென்னை: தூர்வாரியபோது கிணற்றுக்குள் கைதவறி விழுந்த தொழிலாளி.. விஷவாயு தாக்கி பலி!
Published on

சென்னை புழல் பகுதியில் கிணற்றை தூர்வாரிய போது, விஷவாயு தாக்கியதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. அதே பகுதியில் சிமெண்ட் உறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது வீட்டருகே தீனதயாளன்(37) என்பவர் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த குடியிருப்பில் உள்ள பாழடைந்த கிணற்றை தூர்வாரும் பணியில் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி உள்ளார். அவர் கிணற்றில் இறங்கிய சிறிது நேரத்தில் கைதவறி எதிர்பாராவிதமாக கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குப் போராடியுள்ளார்.

இதுகுறித்து புழல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்துவந்து அவரை மீட்பதற்குள் கிணற்றிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com