திருப்பூர்: கஞ்சா சாக்லெட்களை பதுக்கி வைத்து விற்பனை - தொழிலாளி கைது

ஊத்துக்குளியில் கஞ்சா சாக்லெட்களை விற்பனை செய்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்ட நிலையில், 2 கிலோ கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: சுரேஷ்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கஞ்சா சாக்லெட்டை ரயில் மூலம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், ஊத்துக்குளி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பூசாரிபாளையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரணை செய்தனர்.

Ganja Chocolate
Ganja Chocolatept desk

விசாரணையில் அவர் அதே பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாகதிப் மாலிக் என்பவர் என தெரியவந்துள்ளது. மேலும் இவர் ஒடிசாவிலிந்து ரயில் மூலம் கடத்தி வந்து கஞ்சா சாக்லெட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

Accused
“கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசுவோம்” - பிரேமலதா விஜயகாந்த்

இதைத் தொடர்ந்து சாகதிப் மாலிக்கை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா சாக்லெட்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com