கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்
கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
கோவையில் கடந்த 2010ல் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதன்படி கோவை மத்திய சிறையை இடம் மாற்றி விட்டு, அந்த இடத்தில் சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதன்பின்பு , அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த காரணத்தால் இத்திட்டம் கைவிட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் கோவை சென்ற தமிழக முதல்வர், ''கோவை மத்திய சிறை இடம் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் சர்வதேச தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்றும் இதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு கட்டமாக இந்த பணி நடைபெறும் என்று அறிவித்தார்.
இதன்படி கோவை மாநகராட்சியின் மையப்பகுதியில் உள்ள சிறைச்சாலை நகருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு காந்திபுரத்தில் நடைபாதை, உள்ளரங்கு, வெளியரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் செம்மொழிப்பூங்கா இரு கட்டங்களாக,. ரூ.200 கோடியில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் தயார் செய்யப்படவுள்ளது. 1.50 கோடி மதிப்பீட்டில் இந்த திட்ட அறிக்கை தயார் செய்யப்படள்ளது.