தமிழ்நாடு
நேர்மையான ஆட்சிக்கோரி, பெண்கள் கையெழுத்து இயக்கம்
நேர்மையான ஆட்சிக்கோரி, பெண்கள் கையெழுத்து இயக்கம்
தமிழகத்தில் நேர்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெசன்ட் நகரைச் சேர்ந்த பெண்கள், கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நேர்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பெசன்ட் நகரைச் சேர்ந்த பெண்கள், கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை முன்வைத்து பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று கூடினர். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் பாரதியார் பாடல்களை அவர்கள் பாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த காவல்துறையினர், முறையான அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உரிய அனுமதியுடன் மீண்டும் கூட்டம் நடத்தப்படும் என கூறிய பெண்கள், அங்கிருந்து கலைந்தனர்.