காவல்துறையினர் மிரட்டியதால் ஆவேசம் - மதுக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு-ல் பள்ளிக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கினர்.
தருமபுரி மாவட்டம் மல்லிக்குட்டை கிராமத்தில் செயல்படும் இந்த டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடையை மூடக்கோரி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால், பெண்கள், மாணவர்கள் கண்ணீர் அஞ்சலி பதாகை ஏந்தி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மக்களை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் டாஸ்மாக் பாரின் கட்டடம் மற்றும் குளிர்சாதன பெட்டிகளை அடித்து நொறுக்கினர். அங்கு வந்த அதிகாரிகள் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.