மெட்ரோ பெண் பயணிகளின் பாதுகாப்புக்கென புதிய உதவிஎண் அறிவிப்பு!

பெண் மெட்ரோ பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் பிரத்யேக மகளிர் உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்x

பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய சென்னை மெட்ரோ நிர்வாகம் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதில், ஏற்கெனவே “பிங்க் ஸ்குவாட்” எனப்படும் தற்காப்புகள் பயின்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்கள் குழுவும், நடைமேடையில் மிகவும் வெளிச்சத்துடன் கூடிய மகளிருக்கென தனியான காத்திருப்பு பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண்களின் பாதுகாப்புக்கென, தொல்லைகளைத் தடுத்தல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த அவசரங்களுக்காக தனியாக “உதவி எண் - 155370” 24/7 மணி நேர சேவை மெட்ரோ தரப்பிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

மகளிர் தினமான நேற்று (8.3.2024) சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இது குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, “ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகளிர் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேக மகளிர் உதவி எண் 155370-ஐ தொடங்கியுள்ளது. மகளிர் உதவி எண் 155370 என்பது 24/7 பெண்களால் இயக்கப்படும் சேவையாகும்.

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உதவி எண் பல சேவைகளை வழங்குகிறது. இதில் தேவைப்படும் போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது.

தற்போது, இந்த உதவி எண் BSNL நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்களில் உள்ள பாதுகாப்பு மற்றும் சேவை அம்சங்கள்:

“- ஆடவர் மற்றும் மகளிருக்கென தனியாக, சுத்தமான பொது கழிப்பிடம் மற்றும் இருபாலருக்கான கழிப்பறைகள், தெளிவான மற்றும் அறியும்படியான அடையாளங்களுடன் அனைத்து நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

- பச்சிளம் குழந்தைகளுடன் பயணிக்கும் தாய்மார்களுக்கென, டயபர் மாற்றுவதற்கான வசதியுடன் பாலூட்டும் அறைகள் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

- ஒவ்வொரு ரயிலும் மகளிருக்காக ஒரு பெட்டி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

- மகளிர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர் ஆகியோருக்கென 8 இருக்கைகள் இரயிலில் அடையாள குறியீடுகளுடன் ஒதுக்கப்பட்டுள்ளன.

- ரயிலின் முதல் மற்றும் கடைசி பெட்டியில், சக்கர நாற்காலிகளுக்கென தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது.

- ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் நிலையங்களை சுற்றுயுள்ள பாதுகாப்பு அம்சங்கள்:

- அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்திலும் சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்
தமிழக வெற்றிக் கழக உறுப்பினராக இணைவது எப்படி? விஜய் வெளியிட்ட வீடியோ!

- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் மெட்ரோ ரயில் நிலைய வரைபடங்கள், ரயில் நேரம், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் மற்றும் அணுகல் அம்சங்கள் உள்ளிட்ட விரிவான பயணிகளின் தகவல்கள் உள்ளன.

வேலைவாய்ப்பு:

ரயில் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளை விரைந்து அணுகுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சக்கர நாற்காலிகள் பயன்படுத்துவோருக்கு படிகள் அல்லாத அனைவரும் அணுகக்கூடிய வழித்தடங்கள், பார்வையற்றோருக்கு உதவியாக தொட்டுணரக்கூடிய தரையமைப்பு ஆகியவைகள் இவற்றில் அடங்கும்.

ஆங்காங்கே, தெளிவான அடையாள குறியீடுகள் பொருத்தப்பட்டுள்ளன. முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தேவைப்படும் வசதிகளை செய்து தர நிலைய கட்டுப்பாட்டாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து ரயில் நிலையங்களில் ஏறும் மற்றும் இறங்கும் இடங்களில் நன்கு வெளிச்சமூட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதியை எளிதில் அணுகுவதற்கு ஏதுவான நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன”

- என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com