\
மகளிர் மேம்பாடு: குரல் கொடுக்கும் புதிய தலைமுறை

மகளிர் மேம்பாடு: குரல் கொடுக்கும் புதிய தலைமுறை

மகளிர் மேம்பாடு: குரல் கொடுக்கும் புதிய தலைமுறை
Published on

பெண் சுதந்திரம், பெண்கள் மேம்பாடு என மகளிரின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் புதிய தலைமுறை, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு தொகுப்புகளை, நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக, புதிய தலைமுறை குழுமத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்குப் புத்துணர்வு மற்றும் ஒருமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனை, புதிய தலைமுறை குழுமத் தலைவர் சத்ய நாராயாணவின் மனைவி, மணிமங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பெண் பணியாளர்களுக்கு நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர் மூலம் புத்துணர்வு பயிற்சி கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிருக்கு, மகளிர் தின நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. புதிய தலைமுறையின் தலைமைச் செயல் அலுவலர் ஷியாம் குமார், நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், மனிதவளப் பிரிவு மேலாளர் சித்ரா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com