தமிழ்நாடு
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா !
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா !
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே காதலனுடன் சேர்த்து வைக்க கோரி காவல்நிலையம் முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
சௌந்தரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த கனிமொழி, அதேபகுதியை சேர்ந்த ஜானகிராமனை சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் நெருங்கி பழகியதில் கனிமொழி கர்ப்பமாகியதாக தெரிகிறது. இந்நிலையில் ஜானகிராமன் கனிமொழியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஜானகிராமனை கைது செய்தனர்.
இந்நிலையில், ஜானகிராமனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி கனிமொழி தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பின்னர் அவர் கலைந்து சென்றார்.

