குடித்துவிட்டு கிண்டல் செய்வதா? - மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்

குடித்துவிட்டு கிண்டல் செய்வதா? - மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்
குடித்துவிட்டு கிண்டல் செய்வதா? - மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிராக பழவேற்காடு நெடுஞ்சாலையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சின்னக்காவனம் பகுதியில் புதிதாக மதுக்கடை  திறக்கப்பட்டது. இது பெண்களை பெரிதும் பாதிப்பதாகவும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளை மது குடிக்க வருவோர் மற்றும் குடித்துவிட்டு செல்வோம் கேலி, கிண்டல்  செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மதுக்கடையை மூடக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்தவித பயனும் இல்லை என அப்பகுதி பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி பொன்னேரி-பழவேற்காடு நெடுஞ்சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பொன்னேரி காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். காவல் துறையினரின் பேச்சு வார்த்தையை ஏற்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர், அரசு மதுக்கடையை மூடிவிடுதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து, பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால், பொன்னேரி-பழவேற்காடு செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com