\
பணிக்கு சென்ற பெண் போலீஸ் : லாரி விபத்தில் உயிரிழந்த சோகம்..!

பணிக்கு சென்ற பெண் போலீஸ் : லாரி விபத்தில் உயிரிழந்த சோகம்..!

பணிக்கு சென்ற பெண் போலீஸ் : லாரி விபத்தில் உயிரிழந்த சோகம்..!
Published on

சென்னையில் பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற மகளிர் போலீஸ் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த மகளிர் போலீஸ் பவித்ரா. இவர் இன்று நந்தனத்தில் பணிபுரிவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். பாரதி சாலையில் இருந்து சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு திரும்பும் போது, பாரிஸ் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி இவர் மீது மோதியது.

இந்த விபத்தில் பவித்ரா எதிர்பாராத விதமாக லாரியின் சக்கரத்திற்குள் சிக்கிக்கொண்டார். அத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துணை ஆணையர் (கிழக்கு) பெரோஸ்கான் அப்துல்லா நேரில் விசாரணை நடத்தினார். மேலும், லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com