திருப்பூரை அடுத்த செட்டிபாளையம், பிரியங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் - சொர்ணகலா தம்பதி. இருவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவரின் சந்தேகத்தால் இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பனியன் கம்பெனி தொழிலாளியான சுரேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், மனமுடைந்த சொர்ணலதா தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். மேலும், "தனது இறப்புக்கு கணவனும், அவரது குடும்பத்தாருமே காரணம்" என்று வாக்குமூலமாக தனது போனில் வீடியோவை பதிவு செய்துள்ளார். மகளை தனது பெற்றோர், சகோதரிகளிடம் ஒப்படைக்குமாறும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, மகளை சகோதரிகள் பார்த்துக்கொள்வர் என்று நம்புவதாக கண்ணீர் மல்க பேசிய அவர், வீடியோவை தோழிகளுக்கும் குடும்பத்தாருக்கும் அனுப்பிட்டு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், சொர்ணகலாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.