\
இறந்தவர்
இறந்தவர்புதியதலைமுறை

பொள்ளாச்சி: பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு: வளர்ப்பு பூனையால் நேர்ந்த சோகம்

பொள்ளாச்சியில் வீட்டில் வளர்த்த பூனை தெருவில் இருந்த பாம்பை வீட்டிற்குள் போட்டதால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த உரிமையாளர் பாம்பு கடித்து பலி
Published on

பொள்ளாச்சி நேரு நகர் பகுதியில் வசித்து வந்தவர் ரவி. இவருடைய மனைவி சாந்தி (58 வயது). கணவன் ரவி கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் சாந்தி தனது மகன் சந்தோஷ் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் வீட்டில் ஒரு பூனைக் குட்டியை ஆசையாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு வெளியே உள்ள வளாகத்தில் சுற்றித் திரிந்த பாம்பை, இவரது வீட்டு பூனை கவ்விக்கொண்டு வீட்டுக்குள் கொண்டுவந்து போட்டுள்ளது.

அந்த பாம்பானது, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சாந்தியை கடித்துள்ளது. இதனையடுத்து சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com