முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பெற்ற அரசு ஊழியரா? - இதைப் படியுங்கள்

முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பெற்ற அரசு ஊழியரா? - இதைப் படியுங்கள்

முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பெற்ற அரசு ஊழியரா? - இதைப் படியுங்கள்
Published on

முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பெற்ற அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு முக்கிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பெண் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மகப்பேறுகால விடுப்பு கடந்த 2016ம் ஆண்டு முதல், ஆறு மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டது. அப்போது தமிழக அரசு வெளியிட்ட அரசாணைபடி, திருமணமான, இரு குழந்தைகளுக்குக் குறைவாக குழந்தைகள் உள்ள பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு, 180 நாட்களிலிருந்து 270 நாட்களாக உயர்த்தப்பட்டது. 270 நாட்கள் தொடர்ச்சியாக அளிக்கப்படும் இந்த விடுமுறையை, எப்போதிருந்து எடுக்கவேண்டும் என்று முடிவு எடுத்து கொள்வதற்கான வாய்ப்பு அந்தப் பெண் ஊழியருக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பெற்ற அரசு ஊழியர்கள் அடுத்த பிரசவத்தின் போது மகப்பேறு கால விடுப்பு எடுத்துக் கொள்ளும் வகையில் அரசாணையில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு இரண்டாவது பிரசவத்தின் போது விடுப்பு அளிக்க சில அலுவலங்களில் மறுக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதால் விடுப்பு அளிக்க முடியாது என்று 2016ம் ஆண்டு அரசாணையை சுட்டிக் காட்டி மறுக்கப்படுகிறது. அதனால், இரண்டு குழந்தைகளுக்கு கீழ் என்பதற்கு பதிலாக இரண்டாவது பிரசவத்திற்கும் விடுப்பு அளிக்கப்படும் என முந்தைய அரசாணையில் திருத்தம் செய்யப்படுகிறது. முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பெற்ற அரசு ஊழியர்களுக்கு மற்றொரு பிரசவத்துக்கும் விடுப்பு அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com