\
கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை

கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை

கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை
Published on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கந்துவட்டி கொடுமை காரணமாக பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுர‌ம்‌ அடுத்த‌‌ மூலக்குறிச்சி பகுதியில் மளிகைக் கடை ந‌டத்தி ‌வருபவர் சரவணன். இவர் கடையை மேம்‌படுத்துவதற்காக கந்தசாமி என்பவரிட‌ம் 7‌‌ லட்சம் ரூபாய் கந்துவ‌‌ட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். கடந்த 3 மாதங்களாக அதற்கான வட்டியை அவரால் செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சரவணன் வீட்டில் இல்லாத ‌சமயத்தில் அவரது மனைவியை மிரட்டிய கந்துவட்டிக்காரரான கந்தசாமி, தகாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்துள்ளார். இதனால் மனம் உடைந்த சரவணனின் மனைவி சுசீலா திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

ஆவேசமடைந்த சரவணனும், அவரது உறவினர்களும், கந்தசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஆயில்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com