குடும்ப தகராறில் 2-வது மனைவியை கத்தியால் குத்திய முதல் மனைவி கைது

குடும்ப தகராறில் 2-வது மனைவியை கத்தியால் குத்திய முதல் மனைவி கைது

குடும்ப தகராறில் 2-வது மனைவியை கத்தியால் குத்திய முதல் மனைவி கைது
Published on

சென்னை செங்குன்றம் பகுதியில் குடும்ப தகராறில் கணவரின் இரண்டாவது மனைவியை முதல் மனைவி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர் செங்குன்றத்திலுள்ள இறைச்சிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். முகமது ரஷீத்திற்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன் சுராகாத்தூன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமது உறவுக்கார பெண்ணான ஜூரானா பேகம் என்ற பெண்ணை இரண்டாவதாக முகமது ரஷீத் திருமணம் செய்தார். தற்போது அவருடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இருவருக்கும் அருகருகே வீடு என்பதால் முதல் மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் சில நேரங்களில் பிரச்னை ஏற்பட்டு பின்னர் சமாதானம் ஆகிவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல் மனைவி சுராகாத்தூன், திடீரென்று சமையலறையிலுள்ள காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து அங்கு வந்த ஜூரானா பேகத்தை தாக்கியதாக தெரிகிறது. இதில் ஜூரானா பேகத்திற்கு முகத்தின் கீழ் தாடையிலும் கழுத்திலும் வெட்டு விழுந்தது. இதனால் வலியில் அலறித் துடித்த அவர் மயங்கிக் கீழே விழுந்தார்.

இதனைக் கண்ட அருகிலுள்ளோர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், முதல் மனைவியான சுராகத்தூனை கைது செய்தனர். முதல் மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் கத்தியால் வெட்டிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com