ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்த தோழி - பெற்றோர் எதிர்ப்பால் காவல் நிலையத்தில் தஞ்சம்

ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்த தோழி - பெற்றோர் எதிர்ப்பால் காவல் நிலையத்தில் தஞ்சம்

ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்த தோழி - பெற்றோர் எதிர்ப்பால் காவல் நிலையத்தில் தஞ்சம்
Published on

திருப்பூரில் ஆணாக மாறிய பெண் தன் தோழியை மணந்ததால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, அவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்

திருப்பூரைச் சேர்ந்த, 21 வயது பெண், அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த, 21 வயது பெண் அவருடன் வேலை செய்து வந்தார், இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பழகி வந்தனர்.

இந்நிலையில், இரண்டு பெண்களில் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் ஒருவகை மாற்றம் ஏற்பட்டுள்ளது, அதன்பின்னர் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு தன்னை திருநம்பியாக மாற்றிக் கொண்டார்.

திருநம்பியாக மாற்றிக் கொண்டதை அடுத்து நட்பாக பழகி வந்த தோழிகள் இருவரும் காதல் வயப்பட்டு இருவரும் கடந்த 8ஆம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் திருநம்பியை திருமணம் செய்து கொண்ட தனது மகளை மீட்டு வர முயற்சி செய்தனர்.

இதையடுத்து பெற்றோர் தேடுவதை அறிந்த இருவரும் திருப்பூர் தெற்கு போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இளம்பெண் மற்றும் திருநம்பியை விசாரித்த காவல் துறையினர் அவர்கள் மனப்பூர்வமாக விரும்பி திருமணம் செய்து கொண்டதை அடுத்து, பெற்றோர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com