\
’’கவுன்சிலர் கணவர் தொல்லை தாங்க முடியல’’ - ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்

’’கவுன்சிலர் கணவர் தொல்லை தாங்க முடியல’’ - ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்

’’கவுன்சிலர் கணவர் தொல்லை தாங்க முடியல’’ - ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்
Published on

திமுக கவுன்சிலரின் கணவர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி பெண் ஒருவர் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வருபவர் பேபி சசிகலா(35). முன்னாள் ஊர்க்காவல் படையில் பணியாற்றிய இவர், நகராட்சி தேர்தலின்போது தங்களுக்கு ஆதரவாக வாக்குக் கேட்க வராத காரணத்தினால் 13வது வார்டு திமுக கவுன்சிலர் பர்கத்துனிஷாவின் கணவர் நாசர் பாஷா என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தகாத வார்த்தைகளால் தன்னை திட்டி மிரட்டுவதாகவும் கூறிய பேபி சசிகலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நல்லிபாளையம் போலீசார் இதனைக்கண்டு துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றி அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கவுன்சிலரின் கணவர் தன்னை மிரட்டுவதாகக் கூறி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முன்னாள் ஊர்காவல் படையைச் சேர்ந்த பெண்ணின் செயல் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com