ஆற்றில் சிக்கி பரிதவித்த பெண்: பத்திரமாக மீட்டு கரைசேர்த்த பேரிடர் மீட்பு படையினர் -வீடியோ

ஆற்றில் சிக்கி பரிதவித்த பெண்: பத்திரமாக மீட்டு கரைசேர்த்த பேரிடர் மீட்பு படையினர் -வீடியோ
ஆற்றில் சிக்கி பரிதவித்த பெண்: பத்திரமாக மீட்டு கரைசேர்த்த பேரிடர் மீட்பு படையினர் -வீடியோ

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌண்டன்ய மகாநதி ஆற்றில் சிக்கிய பெண்ணை பேரிடர் மீட்புப்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.


குடியாத்தம் அருகேயுள்ள வேப்பூரை அடுத்துள்ள செதுக்கரையின் ஆற்றங்கரையோரம் எல்லம்மாள் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் மோர்தானா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் பாதுகாப்பு கருதி குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் எல்லம்மாள் மட்டும் வீட்டிலேயே இருந்துள்ளார்.


நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளத்தில் சிக்கிய எல்லம்மாளை மீட்க வருவாய்த் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த வருவாய்த் துறையினர் நேற்று மாலை வரை முயற்சி செய்தும் மீட்க முடியாததால், பேரிடர் மீட்புப்படையினர் அழைக்கப்பட்டனர்.


இரவில் மீட்புப்பணியை தொடர முடியாததால், ட்ரோன் மூலம் தொடர்ந்து எல்லம்மாள் கண்காணிக்கப்பட்டு வந்தார். இன்று காலை பேரிடர் மீட்புப்படையினர் எல்லம்மாளை மீட்டு முகாமில் தங்க வைத்துள்ளனர்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Di82JZg7Koc" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com