திடீரென ரயில் இஞ்சின் மீது ஏறி நின்ற பெண்... என்ன காரணம்!
தாம்பரம் ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்ஜின் மீது பெண் ஒருவர் ஏறி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையம் அருகே கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை பகுதி உள்ளது. இங்கு நின்றுகொண்டிருந்த இஞ்சின் ஒன்றின் மீது இரவு 9 மணி அளவில் திடீரென பெண் ஒருவர் ஏறினார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தாம்பரம் ரயில்வே காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும், கிழே இறங்க சொல்லி தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டே இருந்துள்ளனர். ஆனால், அந்த பெண் கேட்டபாடில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் பெண்ணை பத்திரமாக மீட்டனர். விசாரணை நடத்தியதில் அந்த பெண் 40 வயதுடையவர் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. ஆனால், எந்த ஊரை சேர்ந்தவர், அவர் யார் என்பது குறித்து எந்த விபரமும் தெரியவில்லை. எனவே, போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.இதனால், அப்பகுதில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.