\
வேலையை இழந்த ஆத்திரத்தில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்..!

வேலையை இழந்த ஆத்திரத்தில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்..!

வேலையை இழந்த ஆத்திரத்தில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்..!
Published on

வேலை பறிபோகக் காரணம் எனக் கூறி பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பொறி‌யாளராக சுசி ஸ்மித்தா என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று காலை பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தபோது, ரகுநாத் என்ற இளைஞர் அவரைக் கத்தியால் 3 முறை குத்தியுள்ளார். சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் ரகுநாத்தை பிடித்து அடித்ததோடு காவல்நிலையத்தி‌ற்கு தகவல் அளித்துள்ளனர். சுசி ஸ்மித்தா, ரகுநாத் ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்ததாகவும், சுசி ஸ்மித்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் ரகுநாத் வேலையிழந்ததால் ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தியதாகவும் ரகுநாத் வாக்குமூலம் ‌அளித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த சுசி ஸ்மித்தா தேனாம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com