நாமக்கல்லில் பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா: தொற்று பரவியது எப்படி என விசாரணை!
நாமக்கல்லில் பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், மாவட்டம் முழுவதும், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 28 பேரின் குடும்பத்தினர் 124 பேர் மற்றும், உறவினர்கள் 159 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நாமக்கலில் பிரசவித்த பெண்ணுக்கு நோய் தொற்று உறுதியான நிலையில் அது அவருக்கு எங்கிருந்து எவர் மூலம் பரவியது என்பதை கண்டறியும் பணி நடைபெறுவதாகவும் தெரிவித்தார்