‘காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்’ - பாதிரியார் மீது புகார்

‘காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்’ - பாதிரியார் மீது புகார்

‘காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்’ - பாதிரியார் மீது புகார்
Published on

தன்னை காதலித்து கர்ப்பாக்கி அதை கலைத்துவிட்டு, தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாக பாதிரியார் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

தஞ்சை வங்கி ஊழியர் காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜ், காந்திமதி தம்பதியினரின் மகள் அபிராமி (21). தஞ்சை மாதாகோட்டை வைரம் நகரைச் சேர்ந்த ஜான் மில்டன் ராபர்ட் என்பவருடய மகன் ஸ்டான்லி டெண்ணி ராபர்ட்ஸ் (27). இவர் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் மீது அபிராமி தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் உள்ள தகவல்களின் படி, ராபர்ட்ஸும் அபிராமியும் 2017ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். ராபர்ட்ஸ் அடிக்கடி அபிராமியுடன் உறவு வைத்துள்ளார். இதன் காரணமாக அபிராமி கர்ப்பம் அடைந்துள்ளார். 

இதையடுத்து கர்ப்பத்தை கலைக்கும்படி, ராபர்ட்ஸ் அபிராமியிடம் கூறியுள்ளார். எதற்காக கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்று அபிராமி கேட்டுள்ளார். திருமணம் முடிந்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என ராபர்ட்ஸ் கூறியதையடுத்து, அபிராமி கர்ப்பத்தை கலைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராபர்ட்ஸ்க்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அபிராமி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ராபர்ஸிடம் அபிராமி கேட்டதற்கு அவர் மறுத்துள்ளார். பின்னர் அபிராமி தனது பெற்றோருடன் ராபர்ட்ஸ் வீட்டிற்குச் சென்று மாப்பிள்ளை கேட்டுள்ளார். ஆனால் ராபர்ட்ஸ் வீட்டினர் அபிராமியை மிரட்டி அனுப்பியுள்ளனர். 

இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் அபிராமி புகார் அளித்தார். இதனால் ராபர்ட்ஸ்க்கு வேறொரு பெண்ணுடன் ரகசியமாக திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி, 13ஆம் தேதி (நாளை) தஞ்சையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதை அறிந்த அபிராமி தனது பெற்றோருடன் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோருடன் சென்று புகார் மனு அளித்துள்ளார். ராபர்ட்ஸ் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வதாகவும் அபிராமி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com