இரண்டு குழந்தைகளுடன் விஷம் அருந்திய தாய் - திண்டிவனத்தில் சோகம்

இரண்டு குழந்தைகளுடன் விஷம் அருந்திய தாய் - திண்டிவனத்தில் சோகம்

இரண்டு குழந்தைகளுடன் விஷம் அருந்திய தாய் - திண்டிவனத்தில் சோகம்
Published on

திண்டிவனத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் விஷம் அருந்திய நிலையில், குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தை மேடு பகுதியை சேர்ந்தவர் அம்மு (28). இவரது கணவர் பிரபு (32) ஆட்டோ ஓட்டுனரான இருந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் உடல்நிலை சரியில்லாமல் உயரிழந்துவிட்டார். இதனால் அம்மு தனது மாமியார் மீனா உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் மாமியாருடன் அம்முவிற்கு பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அம்மு, தனது இரண்டரை வயது மகன் லோகேஷ் மற்றும் எட்டரை வயது மகன் கமலேஷ் ஆகிய இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தியுள்ளார். 

அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மூவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய தாய், ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாயும் விஷம் அருந்திய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் மரணத்திற்கு அப்பகுதியினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com