Car accidentpt desk
தமிழ்நாடு
நெல்லை: லாரி மீது கார் மோதிய விபத்து - கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சோகம்
வள்ளியூர் புறவழிச் சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (53). செங்கல் தொழிற்சாலை வைத்துள்ள இவர் தனது மனைவி விஜய ராணியுடன் (48) திருச்சியில் நடைபெற்ற ஜெபக்கூட்டத்திற்கு காரில் சென்றுள்ளார். இதையடுத்து நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று இரவு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.
Car accidentpt desk
இதில் இன்று அதிகாலை வள்ளியூர் அடுத்த ஏர்வாடி புறவழிச்சாலை மேம்பாலம் அருகே கார் வந்தபோது தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநர், லாரியின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே ராஜனின் மனைவி விஜய ராணி உயிரிழந்தார். ராஜன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பணகுடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.