சென்னை கொளத்தூரில் கடிதம் எழுதிவைத்துவிட்டு பெண் மரணம்
சென்னை கொளத்தூரில் கடிதம் எழுதிவைத்துவிட்டு பெண் மரணம்web

‘பைபிள்ல பணம் வச்சிருக்கன்; அப்பா நல்லவர் இல்ல’ - கடிதம் எழுதிவைத்துவிட்டு பெண் விபரீத முடிவு!

சென்னையில் தொடர்ந்து கணவர் மதுபோதை அருந்திவிட்டு வருவதால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மனைவி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
Published on

சென்னை கொளத்தூர் வெற்றிவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரான இவர் தன்னுடைய உறவுக்கார பெண்ணா பூஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகும் நிலையில், தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.

உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வரும் ரவிக்குமார், தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதாக கூறி கணவர்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதுள்ளது. இந்தசூழலில் சில வருடங்களுக்கு முன்பு பூஜா சண்டையில் தன் தாயின் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் மனைவியை அழைத்து வந்த ரவிக்குமார் பூஜா உடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், நேற்றைய தினம் மது அருந்திவிட்டு வந்த ரவிக்குமாருக்கும் பூஜாக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த பூஜா வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த கடிதத்தில் *அப்பா நல்லவர் அல்ல அவரை நம்பாதீங்க பைபிள்ல பணம் வச்சிருக்கேன் பாதுகாப்பா இருங்க* என்று கடிதம் எழுதி வைத்த, பூஜா தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கும் பெற்றோர்..

இதனை அடுத்து பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பூஜாவின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பூஜாவின் தாய் மற்றும் உறவினர்கள் தன் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், கணவர் அடித்து கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுவதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்தசூழலில் உடற்கூறாய்வு முடிவு வந்த பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் பூஜாவின் உறவினர்கள் அளித்த புகாரையும் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com