திருச்சி: கல்லூரி வளாகத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி பெண் பலி!

இச்சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Trichy college campus accident - CCTV
Trichy college campus accident - CCTVCharles

திருச்சியில் கல்லூரி வளாகத்திலேயே கார் மோதியதில் பெண் துப்புரவு பணியாளர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மணிகண்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ரூபி என்கிற பெண், துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் அவர் நடந்து வந்துகொண்டிருந்தபோது அதிவேகத்தில் வந்த கார் எதிர்பாராத விதமாக அவர்மீது மோதி உள்ளது.

மோதிய வேகத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Trichy college campus accident - CCTV
Trichy college campus accident - CCTVCharles

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கல்லூரிக்கு அச்சிடப்பட்ட நோட்டு புத்தகங்களை வழங்குவதற்காக ஆல்டோ காரில் வந்த சீனிவாசன் என்பவர் திரும்பி செல்லும் பொழுது அதிவேகமாக காரை ஓட்டி வந்ததாகவும், எதிர்பாராதவிதமாக அது ரூபி மீது மோதியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com