தெருவிளக்கின் மின்கம்பி அறுந்து விழுந்ததில் விபரீதம்: பெண் பரிதாப உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பூதூர் பகுதியை சேர்ந்தவர் கனகா. இவர் இன்று காலை வீட்டிற்கு வெளியே வந்த போது, தெருவில் மின் கம்பி அறுந்து கிடந்ததை கவனிக்காமல் மிதித்திருக்கிறார்.

இதனால் மின்சாரம் தாக்கியதில் கனகா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவள்ளூர்
பிரபல மலையாள யூ-ட்யூபர் வீட்டில் சடலமாக மீட்பு... சந்தேக மரணமென வழக்கு! அதிர்ச்சி பின்னணி

மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் விஜயகுமாரிடம் கேட்டதற்கு, ”மின்கம்பத்தின் இன்சுலேட்டர் சரிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் உள்ள மின் கம்பங்களை ஆய்வு செய்து சீரமைக்கப்படும்” என உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com