கர்ப்பபை அகற்றப்பட்ட பின் நிற்காமல் வெளியேறும் சிறுநீர்.. பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

கர்ப்பபை அகற்றப்பட்ட பின் நிற்காமல் வெளியேறும் சிறுநீர்.. பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

கர்ப்பபை அகற்றப்பட்ட பின் நிற்காமல் வெளியேறும் சிறுநீர்.. பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
Published on

ஈரோடு அரசு மருத்துவமனையில் கர்ப்பபை கட்டியை அகற்றும் சிகிச்சையின்போது ஏற்பட்ட தவறால் தொடர்ந்து சிறுநீர் வெளியேறுவதாக பாதிக்கப்பட்டவர்களின் சகோதரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகரில் 17 வயதான மூளை வளர்ச்சி குன்றிய மகளுடன் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். தினம்தோறும் வீட்டு வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு கர்ப்பபை கட்டி இருந்துள்ளது. இதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக கடந்த மாதம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பபை அகற்றப்பட்ட ஒரு வாரத்தில் அவருக்கு சிறுநீர் நிற்காமல் வெளியேறி வந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர் பரிசோதனை செய்ததில், கர்ப்பபை அகற்றியபோது சிறுநீர் குழாயில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும், சேலம் அல்லது கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவினர் மூலம் சரிசெய்து கொள்ளுங்கள் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரி அமுதா தெரிவித்தார்.

மற்ற மாவட்டங்களில் சிகிச்சைக்கு அனுமதித்தால் அவரை பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லாததால் அவருக்கு ஈரோட்டிலேயே மருத்துவம் பார்க்க வேண்டும் என தெரிவித்த அவர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com