நாகையில் மூட்டையில் இருந்த பெண் சடலம்
நாகையில் மூட்டையில் இருந்த பெண் சடலம்pt

நாகை | சாக்கு மூட்டையில் இருந்த பெண்? பணம் இல்லாததால் பெற்ற மகன்களே.. நெஞ்சை உறைய வைக்கும் சோகம்!

பத்து மாதம் வயிற்றில் சுமந்த பெற்ற தாயை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் பெற்ற மகன்களே சாக்கு மூட்டையில் கட்டி காட்டுப்பகுதியில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
Published on

நாகை அருகே உள்ள வடக்குபொய்கைநல்லூர் காந்தி மகான் கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் சந்தேகத்துக்கு இடமாக சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைக்கண்ட கிராம மக்கள் நாகை நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாக்குமூட்டையை பிரித்து பார்த்தபோது, அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்ததுள்ளது.

இதைத் தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார் மருத்துவக் குழுவினரை வரவழைத்து அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர்.

பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.

வெளிவந்த சோக சம்பவம்..

இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில், சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்தது வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த மும்தாஜ் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

வேளாங்கண்ணியைச் சேர்ந்த உசேன் என்பவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு சையது, சுல்தான் இப்ராஹிம் என இரு மகன்களும், ஜீனத்தம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேருமே சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.. டீக்கடையில் வேலை பார்த்து வந்த உசேனின் வருமானத்தை மட்டுமே நம்பி குடும்பம் இருந்து வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வயது முதிர்வு காரணமாக உசேன் உயிரிழந்துள்ளார். அதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்தாஜிம் இயற்கை மரணம் அடைந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய போதிய பொருளாதார வசதி இல்லாததால் மகன்கள் இருவரும் சேர்ந்து தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்தது..

பெற்ற தாயின் உடலை அடக்கம் செய்ய பணம் இலலாததால் பெற்ற மகன்களே சாக்கு மூட்டையில் கட்டி காட்டில் வீசி சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com