Auto driver sivakami
Auto driver sivakamipt desk

“என்னை யாரும் எதுவும் கேட்கக் கூடாது?” ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்... பெண் ஆட்டோ ஓட்டுநர் கைது!

கள்ளக்குறிச்சி அருகே ஆட்டோ ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெண் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
Published on

செய்தியாளர்: பாலாஜி

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேரில் உள்ள அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் தலைவராக இருப்பவர் வேலு. இவரும் சக ஆட்டோ ஓட்டுநர்களும் ஸ்டாண்டில் நின்றிருந்தனர். அப்போது ச.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிவகாமி என்ற பெண் ஆட்டோ ஓட்டுனர் ஸ்டாண்டில் தனது ஆட்டோவை நிறுத்தி ஆட்களை ஏற்றியுள்ளார். இதைப் பார்த்த வேலு இங்கு யாரையும் ஏற்றக்கூடாது என்று கூறியுள்ளார்.

Video footage
Video footagept desk

இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சிவகாமி, வேலுவை அசிங்கமாக திட்டியதோடு “நான் எங்கு வேண்டுமானாலும் வண்டியை நிறுத்தி ஆட்களை ஏற்றுவேன். என்னை யாரும் எதுவும் கேட்கக் கூடாது” என்று கூறியுள்ளார். இதையடுத்து பேசிக் கொண்டிருந்த போதே வேலுவின் கன்னத்தில் அடித்துள்ளார். இதைக் கண்ட மற்ற ஆட்டோ ஓட்டுனர்கள் சத்தம் போட்டுள்ளனர்.

அப்போது சிவகாமி ஆட்டோவில் வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் வேலு அளித்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆட்டோ ஓட்டுனர் சிவகாமி என்ற ராணியை கைது செய்தனர். பெண் ஆட்டோ ஓட்டுனர் ராணி ரகளையில் ஈடுபட்ட வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com