\
தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண் - ராசிபுரத்தில் பரபரப்பு

தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண் - ராசிபுரத்தில் பரபரப்பு

தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண் - ராசிபுரத்தில் பரபரப்பு
Published on

ராசிபுரம் அருகே தன்னை கடித்த பாம்பை உயிருடன் பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து சிகிச்சைக்கு வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மற்றும் இவரது மனைவி ரேவதி ஆகிய இருவரும் தென்னை மர தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது ரேவதி தென்னை மரத் தோட்டத்தில் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தென்னை மர கிளைகளின் கீழே இருந்த கட்டுவிரியான் ரேவதியை கடித்துள்ளது. இதையடுத்து ரேவதியின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் வந்துள்ளார். அப்போது தன்னை பாம்பு கடித்ததாக கணவரிடம் கூறியதையெடுத்து கடித்த பாம்பை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து சிகிச்சைக்காக இருவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவர்கள் பாம்பின் வீரிய தன்மைக்கு ஏற்றார் போல் மருத்துவர் உரிய சிகிச்சையை வழங்கினார். பெண் தன்னை கடித்த பாம்பை உயிருடன் பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து எடுத்து வந்ததால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com