கருக்கலைந்ததை மறைக்க பச்சிளம் குழந்தையை கடத்திய பெண் - சுற்றிவளைத்து கைது செய்த காவல்துறை

கருக்கலைந்ததை மறைக்க பச்சிளம் குழந்தையை கடத்திய பெண் - சுற்றிவளைத்து கைது செய்த காவல்துறை
கருக்கலைந்ததை மறைக்க பச்சிளம் குழந்தையை கடத்திய பெண் - சுற்றிவளைத்து கைது செய்த காவல்துறை

தனக்கு கருக்கலைந்ததை குடும்பத்தினரிடம் இருந்து மறைக்க அரசு மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தையை கடத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று மணிகண்டன்-பாக்கியலட்சுமி தம்பதியின் பிறந்த பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது பெண் ஒருவர் குழந்தையுடன் புதுவை பேருந்தில் ஏறியது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் புதுவை பேருந்து நிலையத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குழந்தையுடன் வந்த பெண் புதுவையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்றதாக ஆட்டோ ஓட்டுனர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ராஜீவ் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்திய போது, சம்பந்தப்பட்ட பெண் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் இருந்துள்ளார். அவரை சுற்றி வளைத்த காவல்துறைனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.


விசாரணைக்கு பின் காவல்துறையினர் கூறியதாவது, “ குழந்தையை கடத்தியவர் கடலூர் அருகே உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்த நர்மதா. அவரது கணவர் பெயர் சிலம்பரசன். நர்மதா கருவுற்ற நான்கு மாதத்தில் அந்தக்கரு கலைந்து உள்ளது. இதனை எப்படி குடும்பத்தாரிடம் சொல்வது என நினைத்த நர்மதா அச்சம் காரணமாக கருக்கலைந்ததை மறைத்து தான் கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தை நம்ப வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவருக்கு வளைக்காப்பும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று வயிறு வலிப்பதாகக் கூறி கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற நர்மதா, அங்கு குழந்தையை கடத்திவிட்டு, அங்கிருந்து புதுவை அரசு மருத்துவமனைக்குச் சென்று குழந்தையுடன் சேர்ந்துள்ளார். இது மட்டுமன்றி தனக்கு குழந்தை பிறந்து விட்டதாக குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்து அங்கு அவர்களை வரவழைத்துள்ளார். குழந்தையை பார்க்க வேண்டும் என்ற மகிழ்ச்சி முனைப்பில் வந்த நர்மதா குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாகவே நாங்கள் அவரை கைது விட்டோம்.” என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com