தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே சித்தர் பீடம் பாலமுருகன் என்ற சாமியார் தனது மனைவியை கடத்திச் சென்றுவிட்டதாக ஒருவர் புகார் அளித்துள்ளார்.
திருவையாறு அருகே உள்ள பள்ளியக்ரஹாரம் மரியா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தனது மனைவியை காணவில்லை என்று நடுக்காவேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சித்தர் பீட சாமியார் பாலமுருகன் தான் தனது மனைவியை கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாமியார் பாலமுருகன் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்றும் அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. புகார் கொடுத்துள்ள விஜயகுமார் சித்தர் பீடத்தில் உபதலைவராக இருக்கிறார்.